புதன், 11 நவம்பர், 2015

மறைந்த வில்லன் நடிகர் அசோகனின் பிறந்தநாள் இன்று. அவரது நினைவாக அவர் பாடிய பாடல்களுள் ஒன்று !!






பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலெக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!


இன்று மறைந்த தமிழ்த்திரைப்பட வில்லன்

நடிகர் S.A. அசோகன் மறைந்த தேதி ஆகும்.

அவர் நடித்து, அவரே பாடிய பாடல் ஒன்றினை

இப்போது உங்களின் கண்களுக்கு விருந்தாக

தருவதே அவருக்கு நான் செய்கின்ற அன்பு

கலந்த மரியாதை என்றே எண்ணுகிறேன்.

பாடல் இடம் பெற்ற திரைப்படம் : இரவும் பகலும்.

சிட்டாடல் மூவிஸ் தயாரித்து இயக்குனர்

ஜோசப் தளியத் மிகவும் சிறப்பான முறையில்

இயக்கி வெளிவந்து அந்தக்காலத்தில் வெற்றி

நடைபோட்ட திரைப்படம்தான் இரவும் பகலும்.

https://www.youtube.com/watch?v=RKjP5nuDjLg

கண்டு களித்து இன்புறுங்கள்.


நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.

வியாழன், 15 அக்டோபர், 2015

வாலிபக் கவிஞர் மறைந்த வாலியின் உள்ளார்த்தம் நிறைந்த, என் நெஞ்சினைத் தொட்ட பாடல் வரிகள் சில !! அதில் இதுவும் ஒன்று !!









பிஸ்மில்லாஹ்-ஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.

மறைந்த காவியக்கவிஞர்வாலிபாடல்கள்எழுதி 

சிறப்பு பெற்ற திரைப்படம் இயக்குனர் திலகம் 

K.S. கோபாலகிருஷ்ணன் கதை,வசனம்,இயக்கம் 

செய்து  வெற்றி அடைந்த படம்தான் 

                           " கற்பகம் " 

என்னும் கருப்பு வெள்ளைத் திரைப்படம்.


அந்தப் படத்தில்தான் புன்னகை அரசி என்று 

பின்னாளில் பட்டம் பெற்ற திருமதி K.R. விஜயா 

அவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட படம்.

இதில் விஜயாவின் தோழியாக மறைந்த 

நடிகையர் திலகம் சாவித்திரி நடித்து சிறப்பு 

பெற்றார். 


இதில் விஜயாவின் முதலிரவு காட்சி ஒன்று 

இடம்பெறும்.

அதில் தோழி சாவித்திரி தனது தோழி 

விஜயாவை பாடல் ஒன்று பாடி வாழ்த்தி அவள் 

கணவர் ஜெமினி கணேசன் இருக்கும் 

அறைக்குள் அனுப்பி வைப்பதாக காட்சி. 

அப்போது பாடப்படும் பாடல் இதோ :-



ஆயிரம் இரவுகள் வருவதுண்டு !!
ஆனால் இதுதான் முதல் இரவு !!
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு !!
ஆனால் இதுதான் முதல் உறவு !!

                                                   ( ஆயிரம்)

வயதில் வருவது ஏக்கம் !! அது 
வந்தால் வராது தூக்கம் !!
வந்ததம்மா மலர் கட்டில் !! இனி 
வீட்டினில் ஆடிடும் தொட்டில் !!

                                                  ( ஆயிரம் )

வருவார் வருவார் பக்கம் !! உனக்கு 
வருமே வருமே வெட்கம் !!
தருவார் தருவார் நித்தம் !! இதழ் 
தித்திக்க தித்திக்க முத்தம் !!

                                                  ( ஆயிரம் )

யாரோ சொன்னார் கேட்டேன் !!
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன் !!
நானாய் சொன்னது பாதி !! இனி 
தானாய் தெரியும் மீதி !!

                                                 ( ஆயிரம்)


இந்தக் காட்சியில் நடித்த நடிகையர்த்திலகம் 

சாவித்திரி கதையின்படி திருமணம் ஆகாத 

ஒரு பெண்.  ஒரு திருமணம் ஆகாத 

பெண்ணிற்கு எப்படி முதல் இரவின்போது 

நடைபெறும் சேதிகள் தெரியும் ? 

அக்கதாபாத்திரத்தின் மீது மக்கள் 

அவநம்பிக்கை பெற்று சந்தேகக்கண்கொண்டு 

அவளை பார்த்துவிடலாகாது என்ற 

கருத்திற்கேற்ப பாடலின் கடைசி பாராவை 

வாலி அமைத்திருந்தது மிகவும் 

பாராட்டுதலுக்கு உரியது என்றே நான் 

கருதுகிறேன்.


இந்த விஷயத்தினை நேயர்களின் கருத்திற்கு 

நான் கொண்டு செல்கிறேன்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா.பாலு.



வெள்ளி, 19 ஜூன், 2015

மறைந்த புரட்சி நடிகர் ( என்று முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் பட்டம் பெற்ற ) M.G.R.ன் தாராள குணமும் அதனால் பாதிக்கப்பட்ட படத்தயாரிப்பாளர் மறைந்த A.V.மெய்யப்பச் செட்டியாரும் !! ( அன்பேவா" திரைப்படத் தயாரிப்பின் போது காஷ்மீரில் செட்டியார் பெற்ற அனுபவங்கள்)





பிஸ்மில்லாஹ்-ஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு-அலேக்கும் !!

எல்லாப் புகழும் இறைவனுக்கே !!

அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கங்கள். 

இன்றைய தினம் நான் எழுதிடும் இந்தக் 

கட்டுரை ஏறத்தாள 50 ஆண்டுகளுக்கு முன்பு 

நடந்த ஒரு தமிழ் சினிமாவின் வெளிப்புறப் 

படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் 

தொகுப்பு இது.


பொதுவாக பேச்சு வழக்கில் ஒரு சொல் உண்டு. 

அதுதான் :-

செட்டிப் பிள்ளையோ !! கெட்டிப் பிள்ளையோ !!

இதன்உண்மைப்பொருள்என்னவென்றால் 

செட்டியார்கள் எந்த ஒரு விஷயத்தில் 

ஈடுபட்டாலும் அதில் எந்த அளவிற்கு 

சிறப்பாகவும் அதே சமயம் 

சிக்கனமாகவும் செய்து முடிக்கவேண்டும் 

என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து 

அந்தக் காரியத்தை செய்து முடிப்பார்கள் 

என்பதே. இதன் அடிப்படையிலேயே 

மறைந்த AVM மெய்யப்பச் செட்டியார், 

தான் எடுக்கும் எந்தப்படமாக இருந்தாலும் 

அதை சிக்கனமாகவும் அதே 

நேரம் சிறப்பாகவும் செய்து முடிப்பதில் பெயர் 

பெற்றவர்.


MGRஐ வைத்து அவர் எடுத்த " அன்பேவா" 

திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக, 

குழுவினருடன் அபிநய சரஸ்வதி 

திருமதி B.சரோஜாதேவி, T.R. ராமச்சந்திரன், 

T.P.முத்துலெட்சுமி,நாகேஷ், மனோரமா மற்றும் 

அனைத்து நடிகர்,நடிகைகளுடன் 

காஷ்மீர் வந்து சேர்ந்தது AVM நிறுவனம். அது 

கடும் குளிர்காலம்.

முன்னணி நட்ஷத்திரங்களான MGR. 

அபிநய சரஸ்வதி சரோஜாதேவி, அசோகன்,

நாகேஷ் மற்றும் ஒரு சிலருக்கு மட்டும், 

குளிரிலிருந்து பாதுகாக்க, கம்பளி சால்வை 

வழங்கினார் செட்டியார் அவர்கள்.

மற்றவர்களுக்கு சாதா போர்வை 

வழங்கிடப்பட்ட நிலையில், 

இதனைக் கண்ட MGR மிகவும் மன வேதனை 

அடைந்தார். உடனே புரொடக்ஷன் மேனேஜரை 

அழைத்து, கலைஞர்கள் எல்லோருக்கும் 

தொழில் நுட்ப வல்லுனர்கள் அனைவருக்கும் 

(லைட் பாய்ஸ் உட்பட அனைவருக்கும்,) தனக்கு 

வழங்கப்பட்டுள்ளது போன்ற அதே கம்பளிப் 

போர்வை வழங்கினால் மட்டுமே தன்னால் 

மேற்கொண்டு நடித்திட முடியும் என்று 

கண்டிப்பாகச் சொல்ல,அதிர்ந்து போன 

புரொடக்ஷன் மேனேஜர் விஷயத்தை செட்டியார் 

காதில் சொல்ல, நிறையச் செலவாகுமே அப்பா 

என்று சொன்ன செட்டியாரிடம், வேறு வழி 

இல்லை.செலவழித்துத்தான்தீர வேண்டியுள்ளது 

என்று சொல்ல, உடனே அனைத்து நபர்கட்கும் 

விலை உயர்ந்த கம்பளிப் போர்வை வழங்கி 

படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவரும் 

நலமுடன் சென்னை திரும்பினர்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை T.R. பாலு )

வெள்ளி, 13 மார்ச், 2015

மெல்லிசை மன்னர்கள் பிரிந்ததன் காரணம் !! இதுதான் !!--ஒரு உண்மை வரலாற்றுச் செய்தி !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


தமிழ்த் திரை உலகின் முடிசூடா 

இசையமைப்பாளராக மன்னனாக 

விளங்கியவர் மறைந்த G.இராமநாத ஐயர் ஆவார். 

அவருக்கு சிஷ்யனாக, உதவியாளராக 

தன்னுடைய இசைப்பயணத்தினைத் 

தொடர்ந்தவர்தான் மெல்லிசை மன்னர் என்று 

பிற்காலங்களில் அழைக்கப்பட்ட 

திரு M.S. விஸ்வநாதன் ஆவார். 

குருநாதரின் ( G.இராமநாத ஐயர்) மறைவிற்கு 


பின்னர், இவரது நெருங்கிய நண்பரான 

K.இராமமூர்த்தியுடன் சேர்ந்து பல நூறு

தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்து

மெல்லிசை மன்னர்கள் என்று எல்லோராலும் 

பாராட்டபட்டவர்கள்தான்  M.S.விஸ்வநாதன் 

& K.இராமமூர்த்தி ஆவார்கள். ஏறத்தாள கால் 

நூற்றாண்டுகளுக்கும் மேலாக இவர்களது 

இணைந்த இசைப்பயணம் தொடர்ந்தது.

இவர்கள் இருவரின் ஜாதகத்தில் தசா புத்தி 

மாற்றம் அடைந்தது. அதற்கேற்ப, A.V.M.

புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 

" சர்வர் சுந்தரம் " திரைப்படத்திற்கு இவர்கள் 

இசையமைத்தனர். அது 1964ம் ஆண்டு.

அந்தப்படம் சினிமா தயாரிப்பது சம்பந்தப் 

பட்ட படம். ஆதலால் ஒரு பாடல் காட்சியில் 

நாகேஷ் வாயை மட்டும் அசைத்திட மறைந்த 

மதுரை மண் பெற்றெடுத்த மன்னவன் T.M.

சவுந்திரராஜன் பாடிட, அந்தப் பாடலை இசை 

சேர்க்கும் நிகழ்வினில் ( COMPOSE) இசை 

அமைப்பாளராக திரு M.S.V. அவர்கள் காட்சியில் 

தோன்றினார். அவ்வளவுதான். இருவரின் 

உறவுகளில் விரிசல் ஏற்படக் காரணமாக 

அமைந்துவிட்டது. இதற்குப் பின் சுமார் 3 

மாதங்களுக்கு உள்ளாகவே இருவரும் கூட்டில் 

இருந்து விலகி தனித்தனியாக இசையமைப்பு

பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள் என்பது 

தமிழ் சினிமா வரலாறில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு 

என்பது நம்மில் பலர் அறிந்திருக்க நியாயம் 

இல்லை. எனவே நான் நேயர்களாகிய உங்கள் 

அனைவருக்கும் இதனைதெரியப்படுத்துகிறேன்.



நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.


( மதுரை T.R. பாலு )

வியாழன், 12 மார்ச், 2015

தமிழ்த்திரைப்பட இயக்குனர் திலகம் மறைந்த A.P.நாகராஜனின் நினைவு அலைகள்.............







எல்லாப் புகழும் இறைவனுக்கே !!


அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் காலை வணக்கம்.

இன்று தொடங்கப்பட்ட இந்த புதிய 

வலைதலத்தினில் தமிழ் சினிமாவைப் 

பற்றிய, இதுவரையிலும் வெளிவராத,

பற்பல செய்திகள் இடம்பெற இருக்கின்றன.

படித்து உங்களது சினிமா அறிவினை 

நீங்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ளவும்.


முதலில் இயக்குனர் திலகம் மறைந்த 

A.P. நாகராஜனின்  நினைவு அலைகளில் 

இருந்து சில சம்பவங்கள் !!


அது 1969 ம் ஆண்டின் துவக்கம். அப்போது 

விஜயலட்சுமி பிக்சர்ஸ் சார்பாக ஒரு 

மாபெரும் வண்ணக்காவியம், மறைந்த 

கொத்தமங்கலம் சுப்புவின் மூலக்கதை 

தில்லானா மோகனாம்பாள் என்னும் 

நாவலைத் திரைப்படம் எடுக்கும் நல்ல 

முயற்சிகள் ஆரம்பம் ஆயின. அப்போது 

நடிகர் திலகம் சிவாஜி கதாநாயகனாகவும் 

நாட்டியப்பேரொளி பத்மினி நாயகியாகவும் 

வைத்து படம் எடுப்பது என்று முடிவு 

செய்யப்பட்டது. ஆனால் அப்போது பத்மினி 

தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து 

வந்தார். வர எப்படியும் 5  மாதங்கள் ஆகும் 

என்று பத்மினி தரப்பில் செய்தி வந்தது.

அதற்கு திரு A.P.N. ஐந்து மாதங்களல்ல,

ஐந்து வருடங்களே ஆனாலும் பத்மினிதான், 

பத்மினி மட்டும்தான், இந்தப் படத்தின் 

நாயகியாக நடிக்க முடியும் வேறு எவராலும் 

முடியாது  என்று அடித்து ஆணித்தரமாக 

சொன்னார். ஐந்து மாதங்கள் கழித்து அவரும் 

வந்தார் அமெரிக்காவிலிருந்து. படத்தில் 

நடித்தார். படமும் வெற்றி அடைந்தது.

 இதுவரையிலும் வெளிவராத செய்தி இது.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை TR. பாலு )